2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கிளீன் ஸ்ரீலங்கா – மட்டக்களப்பில் செயிரி வார செயற்பாடுகள் முன்னெடுப்பு.

உள்ளூர்September 2, 2025 · 1 year முன்2
கிளீன் ஸ்ரீலங்கா – மட்டக்களப்பில் செயிரி வார செயற்பாடுகள் முன்னெடுப்பு.

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்திற்கு இணைவாக அரச நிறுவனங்களில் பராமரித்தல் செயற்திட்டம் திங்கட்கிழமை(02.09.2025) இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் அவற்றினை பொதுமக்களின் பணிகளை இலகுவாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்காக இந்த தேசிய நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இதன் ஒரு கட்டமாக திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர சபையின் ஆணையாளர் எஸ்.தனஜெயன் தலைமையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை வளாகம் மற்றும் பூந்தோட்டம் களஞ்சிய பகுதி என்பன சுத்தப்படுத்தப்பட்டதுடன் அழகுப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.