2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விஷவாயு கசிவு – தொழிலாளர்கள் பாதிப்பு.

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்2
விஷவாயு கசிவு – தொழிலாளர்கள் பாதிப்பு.


புசல்லாவ, டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு கம்பளை மற்றும் வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புசல்லாவ, டெல்டா பெருந்தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் இங்கு நீர் சுத்திகரிக்க குலோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.

அந்தக் குலோரின் வாயு கசிவு காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, அண்மையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதோடு, அருகில் உள்ள தேயிலைச் செடிகளும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

குறித்த நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக புசல்லாவ, பாரதெக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.