2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

12 இந்திய மீனவர்கள் கைது!

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்1
12 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.