2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மரக்குடிலுக்கு ஏறியபோது ஏணி முறிந்து ஒருவர் பலி!

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்2
மரக்குடிலுக்கு ஏறியபோது ஏணி முறிந்து ஒருவர் பலி!

கஹடகஸ்திகிலிய, கொக்எம்பே பிரதேசத்தில் மரம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

ஏணி முறிந்ததில் கீழே விழுந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.