2026 October 17, Saturday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌫️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உள்ளூர்February 23, 2026 · 8 months முன்2
மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த மண்டலம், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று காரணமாக இப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மிகக் கடுமையான காற்றும் வீசக்கூடும் என்பதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.