2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

உள்ளூர்February 21, 2026 · 8 months முன்4
பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை உள்ளடக்கிய ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று முன்தினம் (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாத்தறை பழைய மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் மாத்தறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடம் என்பவற்றை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இக்கலை விழா, பெப்ரவரி 20 முதல் 23ஆம் திகதி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

இவ்விழாவில் காட்சிக் கலைக் கண்காட்சிகள், குறும்படத் திரையிடல்கள், கலைச் சந்தை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் செயன்முறைப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆரம்ப விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.