2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

இலங்கை அணிக்கு அபராதம்

விளையாட்டுAugust 31, 2025 · 12 months முன்0
இலங்கை அணிக்கு அபராதம்

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச  போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.