2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

நிந்தவூர்  பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உள்ளூர்August 31, 2025 · 1 year முன்3
நிந்தவூர்  பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நிந்தவூர்  பகுதியில்  இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது  சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி  நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரியை பின்தொடர்ந்த  அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  அலுவலகத்தின் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


இதன் போது குறித்த கைதான  சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  முதித பிரியங்கரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


இந்த சோதனையின் போதுஇ சந்தேக நபர்  ஐஸ் போதைப்பொருளை  கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக  வகை கார்  03 தொலைபேசிகள்  04 வங்கி அட்டைகள் மற்றும் 01 வங்கி புத்தகம் ஆகியவற்றை  பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.