2026 October 12, Monday ☀️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!

உள்ளூர்August 17, 2026 · 2 months முன்10
நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!

நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில், அனர்த்தத்திற்குள்ளான இரண்டு சிறுவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

நேற்று (16) இடம்பெற்ற இந்த விபத்தின் போது, வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு மீட்புக் பிரிவினரால் குறித்த இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். 

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சிறுவர்கள் இருவரும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.