2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது

உள்ளூர்February 14, 2026 · 8 months முன்3
விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 585 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 29,367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளதுடன், 142 திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.