2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வடகொரியாவின் அடுத்த தலைவர்

உலகம்February 14, 2026 · 8 months முன்5
வடகொரியாவின் அடுத்த தலைவர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 

அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது. 

2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார். 

அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். 

சமீபத்திய இராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரச கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.