2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை

உள்ளூர்February 14, 2026 · 8 months முன்19
அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி புதிய திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன. 

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட 2023 மார்ச் 03 ஆம் திகதியிடப்பட்ட JSC/SEC/ClR/2023 இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு வருட காலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் விஷ வகைகள், அபின் மற்றும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.