2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

4 இலட்சத்தைத் தாண்டியது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

உள்ளூர்February 14, 2026 · 6 months முன்2
4 இலட்சத்தைத் தாண்டியது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

கடந்த காலப்பகுதியில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் மாத்திரம் 12,731 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியப் பிரஜைகளே அதிகளவானோர் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 70,880 எனப் பதிவாகியுள்ளது. 

இதற்கு மேலதிகமாக பிரித்தானி பிரஜைகள் 44,053 பேரும், ரஷ்ய பிரஜைகள் 36,949 பேரும், ஜெர்மானிய பிரஜைகள் 28,332 பேரும், சீன பிரஜைகள் 22,309 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.