2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நேருக்கு நேர் மோதிய இரு முச்சக்கர வண்டிகள் விபத்து

உள்ளூர்February 14, 2026 · 8 months முன்3
நேருக்கு நேர் மோதிய இரு முச்சக்கர வண்டிகள் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்விபத்து இன்று மாலை கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியில், சென்கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. 

கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இதில் கொட்டகலை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.