2026 September 21, Monday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!

ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ!!

BREAKINGஉலகம்August 13, 2025 · 1 year முன்1
ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ!!

ரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையினால் பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியதாகவும் இதனால் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் வடக்கில் உள்ள புறநகர்ப் பகுதியான ட்ரெஸ் கான்டோஸில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்று தீ வேகமாகப் பரவ வித்திட்டதோடு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நபர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்ரியட்டின் பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் இசபெல் டயஸ் ஆயுசோ தமது எக்ஸ் தளத்தில், இக்காட்டுத் தீ காரணமாக நூற்றுக்கணக்கான ட்ரெஸ் கான்டோஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.