2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

எதிர்க்கட்சிகள் விசேட கலந்துரையாடல்.

BREAKINGஉள்ளூர்August 13, 2025 · 1 year முன்1
எதிர்க்கட்சிகள் விசேட கலந்துரையாடல்.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நாளையும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்கத்துக்கு நேரடியாக சவால் விடும் நோக்கத்துடன் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் பயன்படுத்தப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உருவாக்குவது மட்டுமே இதன் நோக்கம் என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.