2026 November 5, Thursday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வவுனியாவில் இயங்கிய வந்த பிரபல உணவகங்களுக்கு பூட்டு

உள்ளூர்February 7, 2026 · 9 months முன்4
வவுனியாவில் இயங்கிய வந்த  பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டன.

குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள்,பழையபேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.