2026 November 5, Thursday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்

உள்ளூர்February 7, 2026 · 9 months முன்3
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன.