2026 November 7, Saturday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தயாசிறியின் கோரிக்கைக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

உள்ளூர்February 6, 2026 · 9 months முன்4
தயாசிறியின் கோரிக்கைக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தடையின்றி கடமையாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்தக் கட்சிக்கு உத்தரவிடக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை இம்மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு இன்றைய தினம் அறிவிக்கப்படவிருந்த போதிலும், அதனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாட்டாளரான தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த உத்தரவிற்கு இணங்க, குறித்த பதவியில் தம்மால் எவ்வித இடையூறுகளும் இன்றி கடமையாற்றுவதற்கு அவசியமான கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.