2026 November 7, Saturday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையே மோதல்

உள்ளூர்February 6, 2026 · 9 months முன்2
இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையே மோதல்

பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து நேற்று (05) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அளுத்கம பாதாகொட வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட மற்றைய பாடசாலை மாணவர்களே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக, அப் பாடசாலையின் ஆசிரியை ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த தாக்குதலுடன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய வெளிநபர்களும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.