2026 November 6, Friday ⛅ கொழும்பு 24° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிப்பு

உள்ளூர்February 5, 2026 · 9 months முன்15
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்  சமர்ப்பிப்பு

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் இன்று இரா.சாணக்கியன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்றில் இன்று, இந்த சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர்,

பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் மீது தவறான கைது, நீண்டகால விசாரணையில்லா சிறைவாசம், அடிப்படை உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

“நாடு உண்மையான ஜனநாயகப் பாதையில் செல்ல வேண்டுமெனில், மனித உரிமைகளுக்கு முரணான இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்து, அதற்கு மாற்றாக சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.


பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நல்லிணக்கம் மற்றும் இன நல்லுறவை கட்டியெழுப்ப இந்த சட்டம் பெரும் தடையாக உள்ளது.

அரசாங்கம் இதுகுறித்து தாமதமின்றி தீர்மானம் எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.