2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2026 ஜனவரியில் பதிவு

உள்ளூர்February 5, 2026 · 6 months முன்0
அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2026 ஜனவரியில் பதிவு

இலங்கை சுற்றுலா வரலாற்றில் மாதமொன்றில் பதிவான அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2026 ஜனவரி மாதத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதத்தில் 275,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட திட்டங்களின் காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் மாத்திரம் மொத்தம் 277,327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த 15ஆம் திகதி வருகை தந்துள்ளனர். அன்றைய தினம் மாத்திரம் 10,483 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாடுகளின் அடிப்படையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 52,061 ஆகும்.

இங்கிலாந்து: 29,540

ரஷ்யா: 27,134

ஜேர்மனி: 17,776

சீனா: 14,003