2026 November 5, Thursday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்

உள்ளூர்February 3, 2026 · 9 months முன்5
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்

இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கார் ஒன்றை இடைமறித்து சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனை செய்தபோது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 97 மூட்டைகளில் 194 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பொலிஸார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், குறித்த காரின் சாரதியான  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கஞ்சா சென்னையில் இருந்து கடத்தப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்தது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக கியூ பிரிவு பொலிஸார் ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் (NIB) ஒப்படைத்துள்ளனர்.

இந்தக் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களை தற்போது விசாரித்து வருவதாக தமிழகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.