2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

உள்ளூர்February 2, 2026 · 9 months முன்5
துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது

மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போனதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 

மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10 தோட்டாக்கள் அடங்கிய மெகஸின் ஒன்றுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

ஆவணங்களைப் பரிசோதித்த போதே, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் அவை காணாமல் போயுள்ள விடயம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.