2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

உள்ளூர்February 1, 2026 · 9 months முன்3
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை (30) குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவ்விருவரும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு அன்றைய தினமே மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

குறித்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.