2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு

உள்ளூர்February 1, 2026 · 9 months முன்4
கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இன்று அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். 

எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி அந்த லொறி பயணித்த நிலையில், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.