2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

உள்ளூர்January 28, 2026 · 7 months முன்0
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன்வைத்தார்.

அதனை அடுத்து சபையில் கடும் வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், குறித்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, பிரஜா சக்திக்கு எதிராக 10 உறுப்பினர்களும், ஆதரவாக 4 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், 05 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

பருத்தித்துறை பிரதேச சபை 20 உறுப்பினர்களை கொண்டது. அதில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள், பிரஜா சக்திக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும், சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.