ஜம்மு காஷ்மீரில் பாரிய மண்சரிவு.

இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண வானிலை காரணமா பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கருகில் கன மழையினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




