2026 November 1, Sunday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படையுங்கள்!

உள்ளூர்January 17, 2026 · 10 months முன்8
தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படையுங்கள்!

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, நாகதீப விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே விகாராதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அந்த விகாரையைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை, அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும். எனவே, உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள் என ஜனாதிபதியிடம் நான் கூறினேன்,” என்று தெரிவித்தார்.