2026 October 26, Monday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வாகனங்களை சேதப்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்

உள்ளூர்January 14, 2026 · 9 months முன்6
வாகனங்களை சேதப்படுத்திய இளைஞருக்கு விளக்கமறியல்

பத்தரமுல்ல தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு, 4 கார்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

வெலிக்கடை பொலிஸார் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் எனவும், அவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அப்போது அவரது உடலில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், சம்பவம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் அதிகளவான போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.