2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

உள்ளூர்January 14, 2026 · 7 months முன்2
நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 10 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் நேற்றைய தினம் அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர், படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.