2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 25° ⛈️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை

உள்ளூர்January 6, 2026 · 10 months முன்3
உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துவது இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல்.

  • மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்.

  • பரீட்சை வினாக்களுக்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல்.

இந்த உத்தரவுகளை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். இவ்வாறான சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம்.

  • பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம்: 119

  • பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கம்: 1911

2025 உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 2,362 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன.