2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!

விஜயின் கடைசி படத்திற்கு செய்யப்பட்ட மாற்றம்

பல்சுவைDecember 30, 2025 · 8 months முன்3
விஜயின் கடைசி படத்திற்கு செய்யப்பட்ட மாற்றம்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் அதே திகதியில் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிறது.

ஹிந்தியில் ஜன்நேதா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வட இந்தியாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறது.

ஹிந்தியில் மல்டிபிளெக்ஸ் செயின் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

அதனால் ஹிந்தியில் ஜனநாயகன் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது . வட இந்தியாவில் விஜய்யின் முந்தைய படங்களை விட ஜனநாயகனுக்கு PVR ,Inox, cinepolis மல்டிபிளெக்ஸ் மூலமாக நல்ல வசூல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் 2026 மார்ச் மாதத்தில் ஜனநாயகன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்படுகின்றது .