2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் காலமானார்.

உள்ளூர்December 28, 2025 · 10 months முன்4
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர்  காலமானார்.

மலையகத்தின் மூத்த இடதுசாரி தொழிற்சங்கவாதி மற்றும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம், நியூமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தனது 79ஆம் வயதில் சனிக்கிழமை (27) இறந்தார் என்று அவரது மகன் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இறுதிக் காலம் வரை தொழிலாளர் நலனுக்காக பணியாற்றியவர்; மலையக மக்களின் சமூக நலனுக்காக பல அமைப்புகளில் ஈடுபட்டு, காணி உரிமை இயக்கத்தில் குரல் கொடுத்தவர். பல கட்டுரைகளை தேசிய பத்திரிகைகளில் எழுதி மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதிக் கிரியா பதுளை பொது மயானத்தில் 29ஆம் திகதி மாலை 3:30 மணிக்கு நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு அவரது மகன் அரவிந்த் (0787754424) தொடர்புகொள்ளலாம்.