2026 October 26, Monday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

உள்ளூர்December 1, 2025 · 11 months முன்2
GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ஊடாக, எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உடனடியாக நன்கொடைகளைச் செலுத்த முடியும்.

இதில், நன்கொடைப் பணம் உடனடியாக நிதிக்கு வரவு வைக்கப்படுவதுடன், வீட்டில் இருந்தோ அல்லது எங்கிருந்தோ இலகுவாக நன்கொடை வழங்கக்கூடியதாகவும், அத்துடன் அந்த செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் (Transparency)காணப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

GovPay உடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் (Commercial Banks) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட FinTech செயலிகள் (Apps) பலவற்றின் மூலம் இந்த அனர்த்த நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடியும்.

நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வங்கிகள் மற்றும் FinTech செயலிகளின் பட்டியலை அறிந்துகொள்ள https://govpay.lk/si/supported-banks-fintech என்ற இணைப்பிற்குச் செல்ல முடியும்.