2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உள்ளூர்December 1, 2025 · 11 months முன்3
குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

அத்துடன், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், இயலுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த செயலாளர், சிறிய குழந்தைகளுக்கும் கொதித்தாறிய நீரை மட்டுமே குடிப்பதற்கு வழங்குமாறும் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள அனர்த்த நிலை காரணமாக, வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், வீடுகளைச் சுத்தம் செய்யும் போது நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு செய்யாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட மேலும் சுட்டிக்காட்டினார்.