2026 October 25, Sunday ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெள்ள அபாய எச்சரிக்கை!

உள்ளூர்November 24, 2025 · 11 months முன்3
வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில், நில்வலா கங்கையின் கீழ் ஆற்று பகுதிகளில் 50 மில்லி மீற்றரும் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா, யான் ஓயா, தெதுறு ஓயா மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய பகுதிகளில் 50-75 மி.மீற்றர் வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நில்வலா, கிங் மற்றும் களு கங்கையை அண்டிய குடா கங்கை, அத்தனகலு ஓயா, மஹா ஓயா மற்றும் தெதுறு ஓயா ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அடுத்த சில நாட்களிலும் மழை பெய்யக்கூடும் என பொறியியலாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாகவே ஈர வலயத்தை அண்டிய பல ஆற்றுப் பகுதிகளில் நீர்மட்டம் உயர்வாகக் காணப்படுவதால், தற்போது பெய்யும் சாதாரண மழையுடனேயே அப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேங்களில் ஒன்பதில் தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

குறிப்பாக தெதுறு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ போன்ற நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பந்தகிரிய, யோத வாவி மற்றும் திஸ்ஸ வாவி போன்ற குளங்களிலிருந்தும் சாதாரண அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதனால் ஆற்றுப் பகுதிகளின் கீழ் பகுதிகளில் நீர்மட்டம் உயர்வாகக் காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது 55 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.