2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்

உள்ளூர்November 24, 2025 · 9 months முன்2
ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்ப கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் முன்னெடுத்தார்.

பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்றார். உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்ற அவர் 1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவில் இணைந்துகொண்டார். 1995ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டத்தைப் பெற்றார்.

1987ஆம் ஆண்டு முற்போக்கு மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளராக மாறிய அவர் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் இடதுசாரி அரசியலை முன்னோக்கிச் கொண்டு செல்ல பங்களிப்பு வழங்கினார்.

2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்றப் பெயரில் புதிய அரசியல் வியாபாரத்தை உருவாக்கினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.