2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மீண்டும் திரைக்கு வரும் “ஃப்ரண்ட்ஸ்”

பல்சுவைNovember 18, 2025 · 11 months முன்7
மீண்டும் திரைக்கு வரும்  “ஃப்ரண்ட்ஸ்”

2001ஆம் ஆண்டு நடிகர்கள் விஜய், சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் ஃப்ரண்ட்ஸ்.

இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

மலையாள திரைப்படமான ‘ஃப்ரண்ட்ஸ்” திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் இரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஃப்ரண்ட்ஸ்” திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வெளியாகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ‘ஃப்ரண்ட்ஸ்” படத்தின் புதிய மேம்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.