2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதி விபத்து

உள்ளூர்November 13, 2025 · 11 months முன்8
திருகோணமலை – புத்தளம் பிரதான வீதி விபத்து

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பேருந்துடன்  மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரபத்தன, கப்புகொல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.