2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

உள்ளூர்November 13, 2025 · 12 months முன்3
மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, நேற்று மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத் தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம்பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட கால கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.