2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

பஸ்சில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி!

உலகம்August 20, 2025 · 1 year முன்2
பஸ்சில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஒரு பயணிகள் பஸ் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.


ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர் என்பதை ஆப்கானிஸ்தான் மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண அரசாங்க செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி தெரிவித்தார்.