2026 October 23, Friday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 28° ⛈️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மரக்கறிகளின் விலை உயர்வு

உள்ளூர்October 22, 2025 · 1 year முன்2
மரக்கறிகளின் விலை உயர்வு

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர் வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை உயர்வடைய கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயத்தை கொழும்பு (Colombo) மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்ச்செய்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை உயரும் என்பது வெளிப்படையானது என அவர் தெரிவித்துள்ளார்.

‘வானிலை மாற்றங்களுக்கு முன்பு விலை குறைவாக இருந்தன. அது விவசாயிகளைப் பாதித்தது.

இருப்பினும் வரும் நாட்களில் விலை நிச்சயமாக உயரும்.

அத்துடன் இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை இப்போது மரக்கறிகளின் விலையை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என்றார்.