2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை

உள்ளூர்October 22, 2025 · 12 months முன்1
மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவை

மலையக ரயில் பாதையில் இன்றும் (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல இடையேயான 10 ரயில் பயணங்கள் இன்று காலை இரத்து செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக ரயில் பாதையின் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் இன்று பிற்பகல் வரை ரயில் பயணங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கொழும்பு கோட்டை முதல் பதுளை இடையே இன்று காலை இயக்கப்படவிருந்த ரயில் சேவை பேராதனை மற்றும் பதுளை இடையே மாத்திரம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று மதியம் 12.00 மணி முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.