2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

Port City முதலீடுகளுக்கு புதிய வர்த்தமானி

உள்ளூர்September 28, 2025 · 1 year முன்1
Port City முதலீடுகளுக்கு புதிய வர்த்தமானி

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு துறைமுக நகரத்தில் (PORT CITY) முதலீடு செய்யும் வணிகங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளின் கால அளவு தொடர்பில் ஒரு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். 

 

இந்தத் திருத்தம் “மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகங்கள்” (PBSIs) மற்றும் “மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகங்கள்” (SBSIs) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது, 2023 ஒகஸ்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கடைசி விதிமுறைகளில் வழங்கப்பட்ட சலுகைகளில் குறைப்பைக் குறிக்கிறது. 

 

2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகள் கடந்த மாதம் காலாவதியாகிவிட்டன. 

 

இதனையடுத்தே நிதி மற்றும் வரி சலுகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 2025 விதிமுறைகள் நான்கு குழுக்களை அறிமுகப்படுத்துகின்றன. 

 

இதில் A விதிமுறை, குறைந்தபட்சம் 300 வேலைவாய்ப்புகளுடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கட்டாயமாக்குகின்றது B விதிமுறை 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டையும் 300 வேலைகளையும் கட்டாயமாக்குகிறது.