2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

இந்திய நிதி அமைச்சர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு.

உள்ளூர்September 20, 2025 · 11 months முன்0
இந்திய நிதி அமைச்சர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு.

“இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் குறித்து இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்”

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை இன்று (19) சந்தித்து கலந்துரையாடினார்.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்தும், எமது சகோதர நாடான இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.