2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

மறைந்த ரோபோ சங்கருக்கு பல பிரபலங்கள் இரங்கல்.

பல்சுவைSeptember 19, 2025 · 11 months முன்0
மறைந்த ரோபோ சங்கருக்கு பல பிரபலங்கள் இரங்கல்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டு வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு “காட்ஸ் ஜில்லா” படப்பிடிப்புதளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு இன்று கொண்டு வரப்பட உள்ளது. இறுதி சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ரோபோ சங்கர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.