2026 September 27, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 33° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.அரச வழக்குகளை கண்காணிக்கும் LMS கட்டமைப்புக்கு Merit Award.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி நிதியத் திட்டம் விரிவாக்கம்.சீர்திருத்தப் பள்ளி விவகாரத்தில் HRCSL நடவடிக்கை!நல்லூரில் இருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு.சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.

நல்லூரில் இருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்September 27, 2026 · 3 hours முன்1
நல்லூரில் இருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லூரடியில் இருந்த திலீபனின் உருவச் சிலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எந்தவிதமான முன்னறிவித்தலும் வழங்காமல் 15க்கும் மேற்பட்ட பொலிஸார் வாகனங்களில் வந்து, சப்பாத்து கால்களுடன் உள்ளே சென்று பலவந்தமாக அந்த சிலையை அகற்றிச் சென்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.