2026 September 27, Sunday 🌧️ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
சீர்திருத்தப் பள்ளி விவகாரத்தில் HRCSL நடவடிக்கை!நல்லூரில் இருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு.சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.தொடை தசைப்பிடிப்பு காரணமாக பட்லர் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்.22 மில்லியன் மக்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு.2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு.

உள்ளூர்September 27, 2026 · 2 hours முன்3
பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.