2026 September 26, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.தொடை தசைப்பிடிப்பு காரணமாக பட்லர் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்.22 மில்லியன் மக்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு.2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கோளாறா? கொங்கோ விமான விபத்து குறித்து விசாரணை!சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.

உள்ளூர்September 26, 2026 · 31 seconds முன்0
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

கடந்த நாட்களில் நடைபெற்ற அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த முன்மொழிவு கொண்டுவரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். 

சபாநாயகர் தொடர்பில் 40க்கும் மேற்பட்ட விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.